அமைச்சின் நோக்கான, “நிலைபேறாக அபிவிருத்தியடைந்த இலங்கை” எனும் எண்ணக்கருவில் நல்லமுறையில் காத்திரமான பெறுபேறுகளை அடைந்துகொள்ளும் பணிகள் தொடர்பில் திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்றது.

கலாசார அலுவல்கள் விடயத்தின் கீழ் இணைந்த திணைக்களங்கள் / நிறுவனங்கள் தொடர்பிலான கொள்கைகள், திட்டங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை தயார் செய்தல், பின்னாய்வு மற்றும் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.

அமைச்சு மற்றும் அமைச்சுக்கு உரித்தான திணைக்களங்கள் / நிறுவனங்களின் மற்றும் கலாசார நிலையங்களின் தகவல்களை உள்ளடக்கிய தரவுக் களஞ்சியத்தை இற்றைப்படுத்திப் பேணிவருவதுடன், மேற்படி தகவல்களை உரிய பிரிவுகளுடன் பரிமாற்றிக் கொள்வதும் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.