புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார நிதிப் பிரிவானது, இன்று நிறைவேற்ற வேண்டியுள்ள செயற்பணியை மென்மேலும் விளைதிறன்மிக்கவாறு நிறைவேற்றுவதை இலகுபடுத்துவதற்காக பின்வருமாறு 02 அலகுகளின் கீழ் மீளத்தாபிக்கப்பட்டுள்ளது.
- நிதிக் கிளை
- பெறுகை கிளை
அதற்கமைய இவ்விரு கிளைகளினாலும் நிறைவேற்றப்படுகின்ற செயற்பணி பின்வருமாறாகும்.
வினைத்திறன்மிக்க கொடுப்பனவு முறைமை ஊடாக சரியான நிதிசார் தகவல்களை அறிக்கையிடல்
நிதிக் கிளை
பிரிவினால் ஆற்றப்படுகின்ற சேவைகள்
- மாதாந்த கணக்குக் பொழிப்பு (CIGAS) மற்றும் ITMIS முறைமையை இயங்கும் நிலையில் பேணிவருதல்.
- வருடாந்த இறுதிக் கணக்குகளை (நிதிக் கூற்றுக்கள்) தயார் செய்தல்.
- வருடாந்த கட்டுநிதி கோரிக்கைத் திட்டங்களை தயார் செய்தல்.
- நிறுவனத்தின் அலுவலர்களுக்கு இடர் கடன், உற்சவ முற்பணம், விசேட முற்பணம் செலுத்தல்.
- வருடாந்த அரச அலுவலர்களின் முற்பண பி கணக்கை தயார் செய்தல்.
- கணக்காய்வு வினாக்களுக்கு பதில் அனுப்புதல்.
- வருடாந்த மதிப்பீடுகளை தயார் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- மாதாந்த கணக்குக் கூற்றுக்களைத் தயார் செய்து திறைசோிக்கு அனுப்புதல்.
- மாதாந்த கட்டுநிதி தேவைகளின் திட்டத்தை தயார் செய்து திறைசோிக்கு அனுப்புதல்.
- மாதாந்த வங்கி இணக்கக்கூற்றுக்களை தயார் செய்து உரிய அதிகாரசபைகளுக்கு அனுப்புதல்.
- திறைசோி கணக்குக் கூற்றுக்கள் மற்றும் திணைக்கள கணக்குக் கூற்றுக்களை இணக்கம் செய்து திறைசோிக்கு அறிக்கையிடல்.
- நிரந்தர பதவியணி 1055 பேருக்கு சம்பளம் தயார் செய்தல்.
- பதிலாள் அடிப்பயைிலான பதவியணிக்கு சம்பளம் தயார் செய்தல் மற்றும் செலுத்தல்.
- மத்தியநிலை கடப்பாட்டு ஆவணத்தை பேணிவருதல்.
- நிதி ஏற்பாடுகளை மீளாய்வு செய்தல்.
- பதவியணியினர் கோரும் சம்பள விபரங்களை தயார் செய்து பெற்றுக் கொடுத்தல்.
- கிளை அலுவலர்களின் லீவு அனுமதி மற்றும் உரிய அறிக்கைகளை தயார் செய்து நிருவாக பிரிவுக்கு அனுப்புதல்.
- கொடுப்பனவுப் பிரிவுக்குக் கிடைக்கின்ற உறுதிச்சீட்டுக்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தல்.
- வருடாந்த மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான அடிப்படை ஆவணமான நி.பி. 135 தத்துவங்களை சாட்டுதல் செய்வதை தயார் செய்து அமுல்படுத்தல்.
- நிலையான சொத்துக்களின் மொடியூலை பேணிவருதல் மற்றும் இற்றைப்படுத்தல்.
- அமைச்சின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் / நிறுவனங்களின் கடிதக் கொடுக்கல் வாங்கல்கள், நிதி நடவடிக்கைகள் மற்றும் கணக்காய்வு வினாக்களை கண்காணிப்புச் செய்தல்.
- ஏனைய திணைக்களங்கள் / மாவட்ட செயலகங்களுக்கு ஏற்பாடுகளை வழங்குதல்.
- மேலதிக ஏற்பாடுகளை கோரல் மற்றும் நி.பி. 66 இன் கீழ் ஏற்பாடுகளை மாற்றல் செய்தல் மற்றும் நி.பி. 115 இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளல்.
- வெளிக்கள கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- மாதாந்த நிதிசார் முன்னேற்றத்தை அறிக்கையிடல்.
- செலுத்திய உறுதிச்சீட்டுக்களின் பொறுப்பு மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல்.
- நிறுவனத்தின் செலவினத்தை கட்டுப்படுத்த மற்றும் கொடுப்பனவு செய்வதன் வினைத்திறனுக்கு உள்ளகக் கட்டுப்பாட்டு செயன்முறையை தயார் செய்து அமுல்படுத்தல்.
- நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு தேவையான ஆலோசனை சேவைகளை உயர் முகாமைத்துவத்துக்கு பெற்றுக் கொடுத்தல்.
பிரிவின் இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய ஏனைய தகவல்கள்
- சம்பள அறிக்கைகளை கோருவதற்கான மாதிரிப்படிவம்
- சில்லறைக் காசு கோருவதற்கான மாதிரிப்படிவம்
- முற்பணம் கோரும் மாதிரிப்படிவம்
- கட்டுநிதி முற்பணம் அல்லாத
- கட்டுநிதி முற்பண விண்ணப்பப்படிவம்
- நி.பி. 115 இன் கீழ் அங்கீகாரம்
- மூலதன சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை
- கலாசார நிலையங்களின் பதில் கனிஷ்ட பதவியணியினருக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு நடவடிக்கைகளை
- வினைத்திறன்மிக்கதாக்குவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய அறிவுரைத் தொகுப்பு
- கலாசார நிலையங்களின் சில்லறை காசு செலுத்தல் மற்றும் புதுப்பித்தல் முறையியலை மென்மேலும் முறைப்படுத்துவதற்கான அறிவுரைத் தொகுப்பை வெளியிடல்.
- கொடுப்பனவு உறுதிச்சீட்டுடன் சமர்ப்பிக்க வேண்டிய பரிசோதனை பட்டியலை உள்ளடக்கிய வழிகாட்டியொன்றை தயார் செய்தல்.
- கலாசார நிலையங்களின் பதவியணியினரின் திருத்திய பிரயாணச் செலவினம், சாதாரண பிரயாணச் செலவினம் மற்றும் மேலதிகநேரத்தை மாதாந்த சம்பளத்துடன் செலுத்துவதற்கான வழிகாட்டியை தயார் செய்தல்.
- வளவாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவது தொடர்பிலான புதிய முறைமைய தயார் செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவது பற்றிய உள்ளக நிதி சுற்றறிக்கையை வெளியிடுதல்.
பெறுகை பிரிவு
கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள கலாசார நிலையங்களின் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளத் தேவையான வேலைகள், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மை மற்றும் தரமான முறையில் பெறுகை வழிகாட்டித் தொகுப்பின் அறிவுரைகளுக்கு அமைய, உரிய நேரத்தில் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அல்லது பெற்றுக் கொடுப்பது பெறுகை பிரிவின் பிரதான வகிபாகமாகும்.
செயற்பணி
- அமைச்சுக்கு மற்றும் பிரதேச கலாசார நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வேறு களஞ்சியப் பொருட்களை கொள்வனவு செய்தல்.
- புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல், காணப்படுகின்ற வாகனங்களை புதுப்பித்தல் மற்றும் சோ்விஸ் செய்தல்
- சம்பந்தமான பெறுகை பணிகள் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான ரயர், ரியுப் மற்றும் பட்டறிகளை கொள்வனவு செய்தல்.
- உற்சவங்களுக்குத் தேவையான உணவு, குடிபானம், தங்குமிடம் உட்பட சகல பெறுகை சேவைகளையும் பெற்றுக் கொள்ளல்.
- கலாசார நிலையங்களுக்குத் தேவையான நடன ஆடைகளை கொள்வனவு செய்தல் மற்றும் தயார் செய்துகொள்ளல்.
- வெளியீடுகளை அச்சிடல் மற்றும் நூலக புத்தகங்கள், வெளியீடுகளை கொள்வனவு செய்தல்.
- அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பெறுகை பணிகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
- அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பெறுகை குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை நியமனம் செய்தல்
- வருடாந்தம் வழங்குநர்களை பதிவு செய்தல்
- வருடாந்தம் பொருட் கணிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில்)
- அடுத்த ஆண்டுக்கான பெறுகை திட்டத்தை தயார் செய்தல்
- களஞ்சிய நடவடிக்கைகளை பேணிவருதல்.