1

கொழும்பில் நடைபெற்ற 10 ஆவது சார்க் மாநாட்டில், தெற்காசியாவின் விசேட கலைகளை மேம்படுத்துவதற்காக தெற்காசிய கலாசார நிலையமொன்றை கொழும்பில் தாபிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பது பல்லாயிரம் வருட காலமாக தெற்காசியாவுக்கே தனித்துவம் வாய்ந்த கற்புல மற்றும் வாய்மூலமான கலாசார மரபுரிமைகள், அதன் பெறுமானங்கள் மற்றும் பல்வகைத்தன்மையை கூட்டாக பகிர்ந்துகொள்ளல், பேணல் மற்றும் மேம்படுத்துவதற்காகவாகும்.

phoca thumb l 1கலாநிதி பண்டித் அமரதேச அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டும் வகையில் அமரதேவ அசபுவ என்ற பெயரில் அழகியற்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையமொன்று பத்தரமுல்ல அபேகம வளவில் தாபிக்கப்பட்டுள்ளது.