சர்வதேச பகவத் கீதை விழா ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விவேகானந்தா கலாசார நிலையத்தில் 23 ஆம் திகதி நடைபெற்றது. சுவாமி

சமூக அமைப்புகள் மற்றும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கீதா மஹோத்ஸவம் நடத்துவதற்கான பூர்வாங்க திட்டங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந் நிகழ்வில் மகாசங்கரத்ன, இந்து மதகுருமார்கள், புத்தசாசன் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் ஹெட்டியாராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் தொல்லியல் பதில் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க, சுவாமி விவேகானந்தா கலாசார நிலைய பணிப்பாளர் அங்குரன் தத்தா, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் வை அநிருத்தனன்,யாழ் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துண்டனர்.