நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கலாசார அலுவல்கள் திணைக்களம்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

தொலைநோக்கு

இலங்கை கலசாரத்தின் வளர்ச்சி

தொழிற் பிரகடனம்

இலங்கை அடையாளத்துடன் இலக்கிய கலை மற்றும் கலாசர அலுவல்களை பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் பரவலாக்கல் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.

குறிக்கோள்கள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்காக கலாசார அலுவலகள் தொடர்பான விடைய அமைச்சரால் முன்னெடுக்கப்படுகின்ற கருத்திட்டங்களை பலனுடையதாகவும் உற்பத்தித்திறனுடையதாகவும் செயற்முறைப்படுத்திட துணையளித்தல்.


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அமைவாக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தகுந்த விதமாக நிதிசார் துணையளிப்பதன் மூலம் இலங்கை இலக்கிய துறையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் துணையளிப்பதோடு அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் மற்றும் மகாவம்சம் மற்றும் கலசார பெறுமதியுடனான ஏனைய நூல்களை வெளியிடல்.


கலை மற்றும் சிற்பங்களின் உறுதிபாட்டுக்கும் பரவலுக்கும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை இலங்கை கலாசார துறையினை வளப்படுத்துவதற்காக தீவிர முறையில் செயற்முறைப்படுத்தல்.

முக்கிய செயற்பாடுகள்

 • கலைஞர்களுக்கு மற்றும் எழுத்தளர்களுக்கு அவர்களின் ஆக்கங்களை வெளியிடுவதற்கு தகுந்த உதவிகளை பெற்றுக்கெடுத்தல்
 • சிங்கள/ஆங்கிலம், சிஙகளம்/சிங்களம் அகரவரிசைகளை தொகுத்தல் மற்றும் அச்சுப்பதிவு செய்தல்
 • கலைக்களஞ்சியத்தை தொகுத்தல் மற்றும் அச்சுப்பதிவு செய்தல்
 • மகாவம்சத்தை தொகுத்தல் மற்றும் அச்சுப்பதிவு செய்தல்
 • எழுத்தாளர்களுக்கான நிதி உதவி வழங்கல்
 • நூலக வசதிகளை பெற்றுக்கெடுத்தல்.
 • பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இலக்கிய விழாக்களை ஏற்பாடு செய்தல்.
 • இலக்கிய மற்றும் ஆக்கபூர்வமான நூல்களை விநியோகித்தல் மற்றும் பிரசுரித்தல்.
 • அரச விருது வழங்கல் பெருவிழாவை ஏற்பாடு செய்தல்.
 • மாவட்ட ரீதியில் இலக்கிய வேலைப் பட்றைகள் மற்றும் பயிற்ச்சிகளை பாடசாலைகளுக்காக ஏற்பாடு செய்தல்.
 • புதிய எழுத்தாளர்களுக்கான வேலைப் பட்றைகளை ஏற்பாடு செய்தல்.
 • இலங்கை இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.

கலாசார செயற்பாடுகளின் வளரச்சிக்காக கீழ் காணும் கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பயண வழியாக அமைவதுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை மெருகூட்டுவதற்காகவும் இலங்கை கலச்சாரத் துறையினை வளுப்படுத்திக் கொள்வதற்கும் நிகழ்ச்சிகளை முறையாக மேற்கொள்ளல் அவசியம்.

கலை மற்றும் சிறபங்களை ஊக்கிவைத்தல்

கீழ் காணும் சபைகள் இலங்கை கலைக் கழகத்தின் கீழ் செயற்படுகின்றன

 • இலக்கிய சபை
 • நாடக சபை
 • நடனம், நட்டிய நடனம் மற்றும் பொம்மலாட்டம் சபை
 • இசைச் சபை
 • கலை மற்றும் சிற்ப சபை

இலக்கியம் மற்றும் வெளியீடுகள்

திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்கள்

 • சிங்கள அகராதி அலுவலகம்
 • சிங்கள கலைக்களஞ்சியம்
 • மகாவம்சம் தொகுப்புப் பிரிவு

சிங்கள அகராதி அலுவலகம்

 • சிங்கள – ஆங்கில அகரதி
  சிங்கள – ஆங்கில அகராதி 27 ஆம் கண்டம் தொடர்பாக ஏற்பட்ட ஆடசேபனத்தின் காரணமாக அதன் ஒரு பகுதியை குறைவாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் அதனை 28 ஆம் காண்டத்துடன் நிவரத்தி செய்வதற்கு 27 ஆம் காண்டத்தின் 200 பக்கஙளை 28 ஆம் காண்டத்துடன் இணைக்கப்பட்டு அதகன இறுவெட்டில் தியப்பட்டுள்ளது. சிங்கள் – ஆங்கில அகராதியின் 29 மற்றும் 30 ஆம் கண்டங்களுக்கு உட்படும் கட்டுரைகளின் மீளாய்வு மற்றும் ஆராய்வுப் பணிகள் 50% ம்  இறுதி அடைந்துள்ளது. இக் கண்டங்களுக்கு புதுதாக சேர்க்கப்படும் 1000 ம் புதிய செற்கள் தெடரப்பான கட்டுரைகள் கணனிமயப்படுத்தி வருகின்றன. 28, 29 மற்றும் 30 ஆம் காண்டங்கள் அச்சு பதிவுக்கு தயாரான நிலையில் இருப்பதோடு சிங்கள – ஆங்கில அகராதியை இறுதிசெய்திட ஏனைய காண்டங்களுக்கு சொற்களின் பற்றாக்குறைவே காரணமாக அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் போது 28 ம் காண்டத்தை அச்சுப் பதிவு மூலம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்தோடு ஏனைய காண்டங்களின் குறை நிறைவு செயத்ததுடன் சிங்கள – ஆங்கில அகராதியின் 29 ம் காண்டத்தை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.
 • சிங்களம் - சிங்களம் திருத்தியமைக்கப்பட்ட அகராதி
  அச்சிடுதல் மற்றும் மீண்டும் திருத்த மூன்றாவது ஆதாரம் படித்தலின் பின்னர் 5 வது தொகுதி தொடங்குவதில் நோக்கம் நிறைவு அடைந்தது. இத்  தொகுதியில் புதிய வார்த்தைகள் உட்படுத்தும் நோக்கத்துடன் - 400 கடிதங்களை ஆதாரம் படித்தன் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. 2010 ல், 6 வது தொகுதி சிங்களம்-சிங்களம் மீண்டும் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு அச்சிடுவதற்கு உத்தேசிக்கப்படுகின்றது. தீவிர வாசிப்பு மற்றும் மீள திருத்திய பிறகு ஏனைய தொகுதிகளுக்காக புதிய சொற்களை சேகரிக்க்படும்.
 • சிங்களம் - சிங்களம் சிறு அகராதி
  சிங்கள அகராதி சுருக்கமானதாகவும் இரண்டு தொகுதிகள் உள்ளடங்கியதகவும் வெளியிடப்பட்டது. சிங்களம் - சிங்களம் குறு அகராதியின் 2 வது தொகுதி, ஆதாரம் படித்தன் பிறகு அச்சிடுவதற்கு தயாரான நிலையில் உள்ளது.
 • சிங்களம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி
  சிங்களம், தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளால் ஒரு அகராதியினை வெளியிடும் நோக்கத்துடனும் குறிக்கோளுடனும் கூடிய இவ் அகராதியின் முதலாவது தொகுதி ஏற்கனவே அச்சுப் பதிவுக்காக செலுத்தப்பட்டுள்ள அதே வேளையில் ஆதாரம் படித்தல்களும் நடந்து வருகின்றது.  இரண்டாம் தொகுதிக்காக மீதமுள்ள சொற்களுக்கு தமிழ் பொருள் வழங்கி வருவதோடு ஏற்கனவே 600 கட்டுரைகளை நிறைவு செய்யப்பட்டுள்ளன. 1500 க்கு மேற்பட்ட கட்டுரைகள் மும் மொழிகளால் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. 2வது தொகுதி கட்டுரைகளை கணனிமயப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளதோடு அதனை இறுவெட்டில் பதிவு செய்வதோடு 2010 ஆம் ஆண்டில் 3 வது தொகுதியின் தமிழ் பொருள்களை ஆராய்வதற்கும் எதிர் பார்க்கப்படுகின்றது.
 • சிறுவர் அகராதி
  சிறுவர்கள் அகராதியினை குறுகிய காலப்பகுதியினுள் இறுதிப் படுத்துவதை நோக்கமாக கொண்டு – தீவிர படித்தலின் பிறகு எழுதப்பட்ட 3500 புதிய சொற்களை குறிப்புகளுடன் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் அகராதிக்கு மேலும் வார்த்தைகள் சேகரித்து அதன் பின்னர் அட்டைகள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கள கலைக்கலஞ்சிய அலுவலகம்

14 வது தொகுதியின் கையெழுத்துப் பிரதிகள் 2009 ஆம் ஆண்டிறுதியில் அச்சிடுவதற்காக தயாரான நிலையில் உள்ளன. 2010 இல் சிங்கள கலைக்களஞ்சியத்தின் 12 வது தொகுதியை அச்சகத்திற்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, 13 வது தொகுதியின் ஆதாரம் படிப்பதற்கும் அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 14 தொகுதியின் கையெழுத்துப் பிரதிகளை அச்சிடுவதற்கு ஒப்படைக்க எண்ணப்படுவதோடு  15 தொகுதியின் கையெழுத்துப் பிரதிகளை எழுத ஆரம்பிக்கப்படும் நிலையில் உள்ளது.

தேசிய கலைக்கூடம்

பொது மக்களுக்கு கண்காட்சிகளை நடாத்துவதற்கு ஒதுக்கப்படலாம். இது குளிரூட்டப்பட்ட இரு வளாகங்களை கொண்டுள்ளது. ஒரு நாளுக்கான நிறுவன கட்டணம் ரூபா. 1000 ம். வைப்புத்தொகை ரூபா. 2,500/=

ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு

மேடை கலைகளை ஊக்கி வைக்கும் முகமாக இவ் அரங்கினை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இவ் அரங்கு 847 ஆசனங்களை கொண்டமைந்து இருப்பதோடு ஏனைய வசதிகளுடனான கேட்போர் கூடமும் இவற்றிற்கு உட்படுகின்றது.

தேசிய நடன மற்றும் இசை குழு

கலாசார நிகழ்ச்சிகள் தொடர்ப்பாக இலங்கையினை பிரதிநிதித்துவப் படுத்தும் இக் குழுக்கள் தேசிய விழாக்களிழும் பங்கேற்குகின்றது.

தொடர்பு விபரம்,

Mrs. Anusha Gokula Fernando
பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8 ஆம் மாடி, செத்சிரிபாய,
பத்தரமுல்ல,
இலங்கை
தொலைபேசி : + 94 011 2872035
இணையத்தளம்
: www.culturaldept.gov.lk

Last Updated on Tuesday, 30 June 2015 13:06  

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.