அரச நிறுவனங்களில் சேவையாற்றுகின்ற அலுவலர்களின் ஆக்கபூர்வமான திறமைகளை மெருகூட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேற்படி ஆக்கங்களை வெளிக்கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் அதன் மூலம் அரச நிறுவனங்களின் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டி நடாத்தப்படுகின்றது.

அதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் சிறுவர் பேச்சு, கவிதை, பாடல் இயற்றல், சித்திரம், சிறு கதை, குறுந்திரைப்படம், புகைப்படம் மற்றும் குறுந் நாடகம் ஆகிய பிரிவுகளின் கீழ் இப்போட்டி நடைபெறுகின்றது. மேற்படி போட்டிக்குரிய சுற்றறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.